Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஈரானிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

இஸ்ரேல் - ஈரானிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

13 ஆனி 2025 வெள்ளி 16:27 | பார்வைகள் : 2851


இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பதற்ற நிலையை தணிப்பதற்கு இரு நாடுகளும் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து, உரையாடலில் ஈடுபட்டு, பதற்ற நிலையை தணிப்பதற்கான முயற்சிகளைத் தொடருமாறும் கோரப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்ற நிலையில், அங்கு உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் உள்ளன.

அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்