பிரான்சுவா பய்ரூ – பிரதமராக 6 மாதங்கள்: சவால்கள், சர்ச்சைகள், சாதனைகள்

13 ஆனி 2025 வெள்ளி 12:51 | பார்வைகள் : 576
இன்று, ஜூன் 13, பிரான்சுவா பய்ரூ பிரதமராக ஆறாவது மாதத்தைக் கடக்கிறார். கடந்த டிசம்பர் 13, 2024, அன்று பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல்; மக்ரோனின் பரிந்துரையினால் அவர் நியமிக்கப்பட்டார்.
தற்போது பிரான்சில் ஒரு பிரதமர் ஆறு மாதங்கள் நீடிப்பதே பெரும் சாதனையாக உள்ளது.
அவர் தனது பதவியை எடுத்துக்கொண்டபோது, 'எதிர்ப்பார்ப்புகள் எவெரஸ்ட் போல் உயரமாக இருக்கின்றன' என்று கூறினார்.
அரசாங்க உறுப்பினர் தேர்வு:
இடதுசாரி அரசியல்வாதிகள் சிலரை இணைக்க முயற்சி, ஆனால் வெகு கவனிக்கத்தக்க ஆளுமைகள் வரவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட்டணிகள் தேவைப்பட்டன.
சில முக்கிய நியமனங்கள்:
எலிசபெத் போர்ன் – கல்வி அமைச்சராக
ஜெரால்ட் தர்மனன் – நீதித்துறை
புருனோ ரத்தையோ – உள்துறை
மய்யோத் சர்ச்சை:
தீவுகளை தாக்கிய சிடோ புயலுக்குப் பின் பய்ரூ சுய ஊராட்சி நகரமான 'பாவுக்கு' பயணம் செய்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மன்னிப்புடன், பின்னர் அவர் "Mayotte Debout" என்ற திட்டத்தை அறிவித்தார்.
பேத்தாரம் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்:
பைரூவுக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறித்து முன்கூட்டியே தெரிந்ததாக வதந்திகள். அவரது மகள் ஏலென் பர்லாந்த், இந்த விவகாரம் குறித்து புத்தகத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பய்ரூ தனது துணிச்சலான 5 மணி நேர விசாரணையின் போது, குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
ஓய்வூதியத் திருத்தம்:
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் "Conclave" எனப்படும் கலந்துரையாடலை ஆரம்பித்தார். ஆனால் ஓய்விற்கான வயதை 62-க்கு குறைக்க முடியாது என்ற நிலைப்பாட்டால் தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்புக்கு உள்ளானார்.
அல்ஜீரிய மற்றும் அமெரிக்கா தொடர்பான சர்வதேச சிக்கல்கள்:
அல்ஜீரியாவுடன் உறவுகள் முற்றிலும் மோசமான நிலைக்கு சென்றது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வணிக போர், புதிய சுங்க வரிகள், பிரான்சை பாதித்தன.
2026 பாதீடடு செலவுக்கழிவு:
40 பில்லியன் யூரோவுக்கான செலவைக் குறைக்கும் திட்டம் தயாரிக்கிறார்.
TVA Sociale மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
இடதுசாரிகள் மற்றும் தேசியமுன்னணியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.