இடி மின்னல் தாக்குதல்களுடன் அடைமழை! - 17 மாவட்டங்களுக்கு ’அதிகபட்ச’ எச்சரிக்கை!!
13 ஆனி 2025 வெள்ளி 10:24 | பார்வைகள் : 9695
ஜூன் 13, இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களும் - அடை மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் நிலவுவது போல், நண்பகல் வரை மிக கடுமையான வெப்பமும், பிற்பகலின் பின்னர் மழை கொட்டித்தீர்க்கும் எனவும் Météo France தெரிவிக்கிறது. நாட்டின் வடக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு மாவட்டங்கள் முழுவதுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 17 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான “செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Dordogne, Eure, Haute-Garonne, Gers, Gironde, Landes, Lot-et-Garonne, Manche, Mayenne, Orne, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Sarthe, Seine-Maritime மற்றும் Somme ஆகிய மாவட்டங்களுக்கு இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களுடன் சில பகுதிகளில் மணிக்கு 110 தொடக்கம் 120 கி.மீ வரை புயல் காற்றும் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan