ராஜ்யசபா எம்.பி., ஆனார் கமல்: போட்டியின்றி 6 பேர் தேர்வு
13 ஆனி 2025 வெள்ளி 09:05 | பார்வைகள் : 2704
ம.நீ.ம., தலைவர் கமல் உள்ளிட்ட ஆறு பேர், போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்ட ஆறு பேரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், ஜூலையில் முடிகிறது.
இதையடுத்து, அப்பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க., சார்பில் மீண்டும் வழக்கறிஞர் வில்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
புதிதாக சல்மா, சிவலிங்கம் ஆகியோருக்கும், ம.நீ.ம., தலைவர் கமலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., தரப்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இவர்கள் உட்பட தேர்தலில் போட்டியிடுவதற்கு, 13 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
முறையான பரிந்துரை இல்லாததால், 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வில்சன், சல்மா, சிவலிங்கம், ம.நீ.ம., சார்பில் போட்டியிட்ட கமல் ஆகியோர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை, தேர்தல் நடத்தும் அதிகாரியான, சட்டசபை கூடுதல் செயலர் சுப்பிரமணியத்திடம் பெற்றுக் கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தனபால் ஆகியோரும், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பெற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan