மருத்துவப் படிப்பில் Numerus Apertus முறைக்கு முற்றுப்புள்ளி — அமைச்சர் அறிவிப்பு!
12 ஆனி 2025 வியாழன் 21:05 | பார்வைகள் : 11735
சுகாதாரத்துறை அமைச்சர் யானிக் நொய்தர் (YANNICK NEUDER) ஜூன் 12 அன்று ஒரு செவ்வியில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிகரிக்க' என '“Numerus Apertus” முறையை (மருத்துவப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படும் குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது) ஜூன் 17ஆம் தேதி நீக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
2020இல் அறிமுகமான இந்த முறை, மாநிலத் தேவைகளின் அடிப்படையில் இரண்டாம் ஆண்டில் குறைந்தபட்ச மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதிக்கிறது.
இது இன்னும் அதிக கட்டுப்பாடுள்ளதாக இருக்கிறது என நொய்தர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளுக்குப் போன பிரெஞ்சு மாணவர்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பிக்கொள்வது முக்கியம் எனவும் நொயுடர் கூறினார்.
அத்துடன்
உளவியல் துறைக்கு முக்கியத்துவம்.
அரசின் புதிய திட்டத்தின் தொடர்பில், அவர், இளையோரின் மனநலத்தை மேம்படுத்த உளவியல் பயிற்சி கட்டாயமாக செய்ய வேண்டும்.
உளவியல் பயிற்சி மருத்துவர்களை (internes) 2027ல் 500 இலிருந்து 600 ஆக உயர்த்த வேண்டும்.
மனநலக் கல்வியை கல்வி, சமூக, தொழில் அமைப்புகளில் விரிவுபடுத்த வேண்டும்.
எனத் தெரிவித்தார்.
மனநலத்திற்கு நிதி இருக்கிறது, ஆனால் போதாது என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan