8 மாத கர்ப்பிணி காவல்துறையினரை ஏமாற்றி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்!!
12 ஆனி 2025 வியாழன் 18:12 | பார்வைகள் : 7938
பரிஸ் 18வது வட்டாரத்தில் உள்ள Lariboisière மருத்துவமனையில் வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், மற்றவர்களுடன் சேர்ந்து திருடிய குற்றச்சாட்டில் காவலில் இருந்த ஒரு பெண் தான் 8 மாத கர்ப்பிணி என்று கூறியவர் தப்பித்துள்ளார்.
மருத்துவர் பரிசோதனை செய்யும் போது காவல்துறையினரை வெளியே அனுப்பியதை பயன்படுத்திக் கொண்டு, அவர் துணிகளை கட்டி ஜன்னல் வழியாக தப்பித்துள்ளார். ஜன்னல் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இருந்துள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் தப்பிச் செல்லும் சம்பவம் இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்குள், அந்த பெண் Corentin-Cariou (Metro 7) மெட்ரோவில் மீண்டும் காவல் துறையினரால் பிடிபட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan