ஆப்பிரிக்காவில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் - அமெரிக்கா அதிர்ச்சி
12 ஆனி 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 3995
ஆப்பிரிக்காவில் சீனா தனது ராணுவ தாக்கத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது, பல ஆப்ரிக்க ராணுவ அதிகாரிகள் சீனாவில் பயிற்சி பெறுவது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
AFRICOM தலைமை அதிகாரி ஜெனரல் மைக்கேல் லாங்லி, “சீனர்கள், அமெரிக்காவின் IMET (International Military Education and Training) திட்டத்தை போலவே செயல்பட முயற்சி செய்கின்றனர்,” என தெரிவித்தார்.
இந்த திட்டம் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவிலியன் பணியாளர்களுக்கு உதவித் தொகை அடிப்படையில் பயிற்சி வழங்குகிறது.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா வெளிநாட்டு உதவிகளை குறைத்ததால் இந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாறாக, சீனா தற்போது தீவிரமாக தனது பயிற்சி முயற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில், சீனா 40 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சுமார் 100 இளம் மற்றும் நடுத்தர நிலை ராணுவ அதிகாரிகளை வரவேற்று பயிற்சி அளித்துள்ளது.
2023-இல் நடைபெற்ற சீனா-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், 2027-க்குள் 500 இளம் அதிகாரிகள் மற்றும் மொத்தம் 6,000 ராணுவ ஊழியர்களை பயிற்றுவிப்பதாக அறிவித்தார். இதற்காக 1 பில்லியன் யுவான் ராணுவ உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
சமீபத்திய வளர்ச்சிகள் அமெரிக்காவின் ஆப்பிரிக்கா தாக்கத்தை குறைத்து, சீனாவின் தாக்கம் உயரும் நிலையில் உள்ளதைத் திடமாக காட்டுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan