இது வன்முறையின் தடையற்ற உருவெடுப்பு - எமானுவேல் மக்ரோன்!
12 ஆனி 2025 வியாழன் 19:05 | பார்வைகள் : 11124
நோஜோனில் (Nogent - Haute-Marne) ஒரு உயர்நிலை பாடசாலை மேற்பார்வையாளரை கொலை செய்த சம்பவத்திற்கு பின்னர், அமைச்சரவை கூட்டத்தில் குடியரசுத் தலைவர் எமானுவேல் மக்ரோன், «நாட்டில் வன்முறைகள் தடையின்றி உருவெடுக்கத் தொடங்கியுள்ளது» என புதன்கிழமையன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வன்முறை நிகழ்வுகளுக்குப் பின்னரான காரணிகளை அதன் பல்வேறு வடிவங்களில் எதிர்கொள்வதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
'நமது நாட்டில் வன்முறை அதிகரித்து, தடையின்றி வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதற்கு தீர்வுகள் கண்டுபிடிக்க வேண்டும்,' என அவர் கூறியதாக, அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் அரசின் பேச்சாளர் சொபி பிரிமாஸ் (Sophie Primas) தெரிவித்தார்.
'இந்த முயற்சி, அனைத்து காரணிகளையும், அவை எவ்வாறு இருந்தாலும், நேராக எதிர்கொண்டே ஆகவேண்டும்,' எனவும் பிரிமாஸ் மக்ரோனுடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan