Paristamil Navigation Paristamil advert login

எயார் இந்தியா விபத்து - மக்ரோனின் முக்கிய செய்தி!

எயார் இந்தியா விபத்து - மக்ரோனின் முக்கிய செய்தி!

12 ஆனி 2025 வியாழன் 18:03 | பார்வைகள் : 9974


இன்று விபத்திற்குள்ளான எயார் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் இதுவரை 204 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிக்குள் வீழ்ந்த இந்த விமானத்தால் இன்னமும் மேலதிக உயிரிழப்புகள் இருக்கும் என அஞ்சப்படுகின்றது.

பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 'பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியிற்கும்' தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட பதிவில், அவர் இந்த 'துயரமான விமான விபத்தை சோகமான உணர்வுகளுடன்' அறிந்ததாகக் கூறினார்.

«இந்தியாவின் அகமதாபாதில் நடைபெற்ற இந்த துயரமான விமான விபத்தை உணர்ச்சியுடன் அறிந்தோம். இந்த வேதனையான தருணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும், நாங்கள் நமது எண்ணங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்»
என மக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்