நேற்று பிரான்சில் இருந்து சென்ற விமானம் விபத்து!
12 ஆனி 2025 வியாழன் 17:03 | பார்வைகள் : 5314
பிரித்தானியாவை நோக்கிப் பறந்த எயார் இந்தியா விமானம் இந்தியாவின் அஹமதாபாத்தில் வானில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் 230 பயணிகளும் 12 விமானப் பணியாளர்கறும் இருந்துள்ளனர்.
இன்று பிரித்தானியா நோக்கிப் பறக்க முயன்ற இந்த போயிங் 787 விமானம் ஓடு பாதையில் இருந்து மேலெழும்பி சற்று நேரத்திற்குள் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்தபோயிங் 787 விமானம் விபத்துக்கு முன்பான நாளில் பரிஸிலிருந்து டெல்லிக்கு பறந்தது.
இந்த போயிங் 787 விமானம், ஏர் இந்தியாவால் 2014 ஆம் ஆண்டு புதிதாக சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
VT-ANB என்ற பதிவு எண்ணைப் பெற்ற இந்த விமானம், சேவையில் சேர்ந்ததிலிருந்து 41,700 மணி நேரங்கள் பறந்திருக்கிறது. ஃபிளைட் ரடார் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, இது 2025 ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமை பரிஸிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு, 8 மணி 47 நிமிடங்கள் நீடித்த ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்டது.
இந்த வியாழன்கிழமையின் முற்பகலில், இது டெல்லி மற்றும் அகமதாபாத் இடையே 1மணி நேரத்திற்குச் சற்று அதிகமாக ஒரு குறுகிய பயணத்தையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan