இயக்குநர் கௌதம் மேனனின் அதிரடி !
12 ஆனி 2025 வியாழன் 14:14 | பார்வைகள் : 4918
'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கவோ அல்லது இயக்குவதற்கோ ஒப்புக்கொள்ள போவதில்லை என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாவதற்கு தயாரானது. ஆனால், அதன்பின் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதமும், இந்த ஆண்டு ஜனவரி மாதமும் கூட வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப் படத்தையும் தான் இயக்கப் போவதில்லை என்றும், படங்களில் நடிக்க போவது கூட இல்லை என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடுவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனனும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan