மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

12 ஆனி 2025 வியாழன் 11:51 | பார்வைகள் : 2806
இரவில் மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் மின்மினி பூச்சிகள் ஒளிர்வதை பார்க்கையில் மிகவும் அழகாக இருக்கும்.
கோடை காலம் வந்துவிட்டது என்பதை மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை வைத்து அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், தற்போதைய காலத்தில் இரவில் மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை பார்ப்பதே அரிதாகி விட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக மின்மினிப் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.
மேலும், மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருகிறது. இந்த காரணத்தால் இரவில் மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025