SNCF : €100 போனஸ்... செப்டம்பர் மாதம் வரை தொடர் வேலை நிறுத்தம்!!
12 ஆனி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 4037
SNCF தொடருந்து தொழிலாளர்கள் மிக நீண்ட வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று ஜூன் 12 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் வேலை நிறுத்தம் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sud-Rail தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மாதம் €100 யூரோக்கள் ஊக்கத்தொகையை கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடருந்து நிறுவனமான SNCF Voyageurs உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை. அதை அடுத்து வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் சேவைகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


























Bons Plans
Annuaire
Scan