இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட 4 பிரெஞ்சு குடிமக்கள்: பன்னாட்டு சர்ச்சை!

11 ஆனி 2025 புதன் 18:28 | பார்வைகள் : 3883
ஜூன் 9 (ஞாயிறு) இரவு, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டு சென்ற 'சுதந்திரக் கப்பல்' (Flottille de la liberté) படகை இஸ்ரேல் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தியது.
12 ஆர்வலர்களில் 4 பிரெஞ்சு குடிமக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரிமா ஹஸ்ஸன் உட்பட, பென் குரியன் விமான நிலையத்தின் அருகிலுள்ள தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 8 பேர் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
படகு பன்னாட்டு நீர்ப்பகுதியில் (International Waters) இருந்தபோது கைது செய்யப்பட்டதாக இணைய நில தரவுகள் காட்டி உள்ளன.
'இஸ்ரேலுக்கு இந்த பகுதியில் அதிகாரம் இல்லை. இது சர்வதேச சட்டத்தை மீறியது' என பிரெஞ்சு சட்ட நிபுணர் பெஞ்சமன் ஃபியோரினி தெரவித்துள்ளார்.
கிரெட்டா துன்பெர்க் இதை 'பன்னாட்டு நீர்ப்பகுதியில் நடந்த கடத்தல்' என்று குற்றம் சாட்டினார்.
பிரெஞ்சு அரசின் நிலைப்பாடு:
'இந்த சம்பவத்தை அரசியல் ஆர்வலர்கள் சாதனமாக்க முயற்சிக்கிறார்கள்' என்று பிரதமர் பிரான்சுவா பய்ரூ குற்றம் சாட்டியுள்ளார்
LFI உறுப்பினர்கள் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.
'பிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்புக்கு அனைத்து செய்திகளையும் இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளோம்' என்று எம்மானுவல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025