சுவிட்சர்லாந்தில் முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் மோசடி
11 ஆனி 2025 புதன் 18:06 | பார்வைகள் : 5504
சுவிட்சர்லாந்தில் முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் ஒரு மோசடி மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில், முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் ஒரு மோசடி மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளதால், மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜெனீவாவில், 96 வயதுப் பெண்மணி ஒருவர் வீட்டுக்கு சிலர் வந்துள்ளார்கள்.
உங்கள் வீட்டுக்கூரையில் உள்ள டைல்ஸ் சரியாக இல்லை. அதை சரி செய்து தருகிறோம் என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
அந்தப் பெண்மணியும் நம்பி அவர்களை அனுமதிக்க, கூரையில் ஏறி சிறிது நேரம் ஏதோ செய்துவிட்டு, அந்தப் பெண்மணியிடம் பில் கொடுத்துள்ளார்கள். பில் தொகை, 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள். இலங்கை மதிப்பில் 10,89,903.39 ரூபாய்.
ஆக, சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மோசடி நடந்த நிலையில், முதியவர்களைக் குறிவைத்து மீண்டும் இந்த டைல்ஸ் மோசடி துவங்கியுள்ளதாகவும், மக்கள் கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan