Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வாகனம் மோதி பாதசாரி பலி!!

பரிஸ் : வாகனம் மோதி பாதசாரி பலி!!

11 ஆனி 2025 புதன் 16:05 | பார்வைகள் : 6906


 

பரிசில் இன்று புதன்கிழமை அதிகாலை வாகனம் ஒன்று மோதி பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

15 ஆம் வட்டாரத்தின் Bois de Boulogne பகுதியில் Allée Marguerite அருகே இச்சம்பவம் ஜூன் 11, இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்றது. அவசரப்பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு நெருங்கும் போது, பாதசாரி அதிக இரத்தப்போக்கினால் உயிரிழந்துள்ளார்.

அவரை மோதித்தள்ளிய சாரதி சம்பவ அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்