AC பயன்படுத்த புதிய விதிமுறை! நாடு முழுவதும் கொண்டுவர முடிவு
11 ஆனி 2025 புதன் 15:15 | பார்வைகள் : 6104
இந்தியாவில் ACயில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் கீழ் இல்லாத அளவிற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
AC பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், அதன் வெப்ப நிலை அளவில் மாற்றம் கொண்டுவர அரசு முடிவு எடுத்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் AC-க்களில் குறைந்தபட்சம் 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.
இதனை ஒழுங்குபடுத்த விரைவில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "AC-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலையை சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்படும். இதன்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் AC-க்களுக்கு மட்டுமின்றி, கார்களில் பயன்படுத்தப்படும் AC-க்களுக்கும் இது பொருந்தும்.
பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan