பெண் நடுவருடன் வாக்குவாதம்.,கையுறையை வீசிய அஸ்வின்- அபராதம் விதிப்பு
11 ஆனி 2025 புதன் 13:46 | பார்வைகள் : 3676
TNPL போட்டியில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில், திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால், தனக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டதாக பெண் நடுவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், துடுப்பினை தனது காலில் அடித்துவிட்டு, கையுறைகளை கழற்றி வீசி கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், தற்போது அஸ்வினுக்கு (Ashwin) போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடுவரின் முடிவுக்கு எதிராக கருத்து வேறுபாடு காட்டியதற்காக 10 சதவீதமும், கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 20 சதவீதம் என 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


























Bons Plans
Annuaire
Scan