குறைவான உளவியலார்கள் - சிக்கலில் தேசியக்கல்வி!

11 ஆனி 2025 புதன் 00:52 | பார்வைகள் : 2691
'இந்த புதிய சோகத்தின் முன், அரசியல்வாதிகள் அதே வெற்று பிரகடனங்களை மீண்டும் செய்கிறார்கள்' என ஆசிரியர்களிற்கான தொழிற்சங்கமான SNES-FSU சங்கத்தின் செயலாளர் சோபி வெனதிதே (Sophie Vénétitay) குறிப்பிட்டுள்ளார.
'ஒரு உலோகம் கண்டறியும் கருவி அல்லது பாதுகாப்பு கதவுகள்; நிறுவுவது முழுமையான தீர்வு என்று நினைப்பது மாயமான எண்ணம்' என்று அவர் கூறுகிறார், 'நிலைமையின் சிக்கலான தன்மை பற்றி பேச வேண்டும்' என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
அடிப்படை பிரச்சினைகளான:
சமூக ஊடகங்களின் தாக்கம்
பெற்றோர்களின் பங்கு
ஆயுதங்கள் மற்றும் வன்முறை குறித்த கண்ணோட்டம்
மாணவர்களின் மன ஆரோக்கியம்
போன்றவற்றில் அரசு தன் கவனத்தைச் செலுத்த மறந்து விடுகின்றது.
'இன்று, ஒரு தேசிய கல்வி உளவியலாளர் (psychologue de l'Éducation nationale) 1,600 மாணவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது' என்று சோபி வெனதிதே வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த அளிவிற்கு மிகக் குறைவான உளவியளார்களை மட்டுமே தேசியக் கல்வியமைச்சு நியமித்துள்ளது.
ஆழ்ந்த பகுப்பாய்வு:
கல்வி முறையில் உளவியல் ஆதரவு போதாமையால் 'இது ஒரு முறையான தோல்வி' - .
உண்மையான தீர்வுகளாக
மாணவர்-உளவியலாளர் விகிதத்தை மேம்படுத்துதல்
ஆரம்ப கட்டத்திலேயே மன ஆரோக்கிய தலையீடுகள்
பெற்றோர்-பள்ளி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
போன்றவற்றைப் பேண அரசு மறந்து விடுகின்றது அல்லது மறுத்து விடுகின்றது
'ஆயுதங்களைக் கண்டறிவதை விட, இளைஞர்களின் வேதனைகளைப் புரிந்துகொள்வதே முக்கியம்' என சோபி வெனதிதே உறுதியாக நம்புகின்றார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1