15 வயதிற்குட்பட்டவர்களுக்கு கத்தி வாங்கத் தடை உட்பட்ட மேலதிக சட்டங்கள் என்ன?
10 ஆனி 2025 செவ்வாய் 22:43 | பார்வைகள் : 13181
நோஜெனில் (Nogent) உள்ள ஒரு கல்லூரியின் முன்பாக 31 வயது கல்வி உதவியாளரை 14 வயது மாணவன் குத்திக்கொன்ற சம்பவத்திற்கு பிறகு, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
15 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பா இணைந்து செயல்படாவிட்டால், சில மாதங்களில் இது பிரான்சில் தனிப்பட்ட முறையில் அமுல்படுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், இளையவர்கள் இனி இணையத்தில் கத்திகளை வாங்க முடியாத வகையில் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, இளைஞர்களுக்கு அனைத்து வகையான கூர்மையான ஆயுதங்களின் விற்பனையையும் உடனடியாக தடை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். கத்திகளை வாங்கும் போது வயது சோதனை செய்யும் முறையும், பொதிகளைப் பெற்றுக்கொள்ள பெரியவர்கள் கையொப்பமிட வேண்டிய அவசியமும் அமுலாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பள்ளிகளின் கதவுகளில் ஆயுதம் கண்டறியும் கருவிகளை (portiques) சோதனை செய்யும் முறையை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சந்தேகத்தில் உள்ள மாணவன் ஏற்கனவே சிறுவர் துன்புறுத்தல் தடுப்பு நிலையத்தில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan