செவ்ரோனில துப்பாக்கிச் சூடு - 15 வயது இளைஞர் காயம் - உயிருக்கு ஆபத்து! முழு விபரம்!
10 ஆனி 2025 செவ்வாய் 20:10 | பார்வைகள் : 7774
சென் சன் துனியின் செவ்ரான் பகுதியில், ஜூன் 8-9 இரவு 15 வயது இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஜூன் 8-9 இரவு, செவ்ரானின் பொதொத் குடியிருப்புப் பகுதியில் உள்ள avenue Youri Gagarine இலுள்ள ஒரு கட்டிடத்தில் இந்த இளைஞர் நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார் - பின்பகுதி, இடுப்புப் பகுதி மற்றும் ஒரு காலில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
அவசர சிகிச்சைப் படையினரான SAMU அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் 'உயிருக்கு ஆபத்தான நிலை' (pronostic vital engagé) எனத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 9 மிமீ குண்டுகளின் உறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.U
பொபினி குற்றவியல் நீதிமன்றம் உடனடி விசாணைகளிற்கு ஆணையிட்டுள்ளது.
சென் சன் துனி மாவட்ட குற்றவியல் புலனாய்வு படை (SDPJ 93) விசாரணையை மேற்கொண்டுள்ளது


























Bons Plans
Annuaire
Scan