கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி இரு தீயணைப்பு படையினர் பலி!!

10 ஆனி 2025 செவ்வாய் 17:14 | பார்வைகள் : 2798
இரு தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர். Laon (Aisne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 09, நேற்று திங்கட்கிழமை இரவு 8.45 மணி அளவில் Rue Châtelaine வீதியில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதை அடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீ மிக மோசமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்டிடத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்துள்ளது. அதற்குள் இரு தீயணைப்பு படையினர் சிக்கிக்கொண்டுள்ளனர்.
அவர்களை தேடும் பணி உடனடியாக இடம்பெற்றது. இரவிரவாக மீட்புப்பணி இடம்பெற்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
22 மற்றும் 23 வயதுடைய இளம் தீயணைப்பு படையினரே உயிரிழந்துள்ளனர். அவர்களது மறைவுக்கு தீயணைப்பு படையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1