Nogent (Haute-Marne) - கல்வி பணியாளர் கொலை: குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் பின்னணி என்ன?

10 ஆனி 2025 செவ்வாய் 18:03 | பார்வைகள் : 4157
ஒரு 14 வயது மாணவன், இன்று (ஜூன் 10, செவ்வாய்) Nogentல் உள்ள collège Françoise Dolto இன் பணியாளரை (31 வயது பெண்) கத்தியால் குத்திக் கொன்றுள்ளான். 'இந்த மாணவனின் இரண்டு பெற்றோரும் வேலைசெய்பவர்கள் என்றும், அந்த மாணவனிற்கு குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை' என்றும் தேசிய கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்
ஒரு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வன்முறை. கொலேஜ் பிரோன்சுவா டோல்டோவில் பணியாற்றிய 31 வயது கல்வி உதவியாளர் மெலனி ஜி., இன்று (ஜூன் 10) 14 வயது மாணவனால் பல முறை குத்தப்பட்டதால் உயிரிழந்தார்.
ரான்ஸ் (REIMS) கல்வி திணைக்களம்; வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் 'மாணவர்கள் வரும் நேரத்தில், அவர்களின் பாடசாலைப் பைகளைக் கண்காணிக்கும் போது இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளது எனவும் இந்தக் கண்காணிப்பு இது ஜோந்தார்மினரின் உதவியுடன தான் நடைபெறுகின்றமை எனபதும் குறிப்பிடத்தக்கது.
குற்றவாளி உடனடியாக ஜோந்தார்மினரால் கட்டுப்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது, ஒரு ஜோந்தார்ம் வீரர் கையில் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், இரண்டு தற்காலிக நீக்கங்களை ஏற்கனவே சந்தித்துள்ளார். அந்தப் பதிவுகள் பாடசாலையில் உள்ளன. வகுப்பில் தொந்தரவு செய்ததற்காக இரண்டு முறை தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளான். இருப்பினும், நவம்பர் 2024 முதல், இந்த மாணவனுடன் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன், சந்தேக நபரின் பின்னணியைப் பற்றி பேசியபோது, அவர் 'குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாதவர்' எனத் தவறான கருத்தை வழங்கி உள்ளார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலேஜ் பிரோன்சுலா டோல்டோவில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. கல்வி திணைக்களத்தின் கூற்றின்படி, வகுப்புகள் வியாழன் காலை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1