Seine-Saint-Denis: 24 மணி நேரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடுகள்!
10 ஆனி 2025 செவ்வாய் 16:28 | பார்வைகள் : 9671
Seine-Saint-Denisஇல் 24 மணி நேரத்திற்குள் மூன்று இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். Bondyயில் திங்கட்கிழமை இரவு 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு இளைஞர்கள் காலில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தக தொடர்புடைய பகுதியில் நடந்துள்ளது. சாட்சிகள் முகமூடி அணிந்த இருவரை ஒரு ரெனால்ட் கிளியோ (Renault Clio) காரில் தப்பியோடியதாக கூறியுள்ளனர்.
காவல்துறையினர் துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். உயிருக்கு ஆபத்து இல்லாமல் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை விட ஒரு நாள் முன்னர், செவ்ரோனில் (Sevran) மற்றொரு 15 வயது இளைஞர் வயிறு மற்றும் இடுப்பில் பல தோட்டக்களால் பலத்த காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வாரமும் Aulnayயில் ஒரு இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் போதைப்பொருள் விற்பனை சம்பந்தப்பட்ட வன்முறைகளாக சந்தேகிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan