இந்திய மக்கள் தொகை எவ்வளவு? ஐ.நா., ஆய்வறிக்கையில் வெளியான தகவல்!
11 ஆனி 2025 புதன் 08:08 | பார்வைகள் : 1760
இந்திய மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளது. அதே நேரத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என ஐ.நா., ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறி இருப்பதாவது: 2025ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் தொடர்ந்தாலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில்,
* 24% பேர் 0-14 வயதுடையவர்கள்,
* 17% பேர் 10-19 வயதுடையவர்கள்,
* 26% பேர் 10-24 வயதுடையவர்கள்,
* 7% பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இந்தியாவின் இளைஞர் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் 15-64 வயதுடையவர்கள். நாட்டில் 68% பேர் வேலைக்கு போகும் தகுதி உடையவர்களாக உள்ளனர்.
2025ம் ஆண்டு நிலவரப்படி, பிறக்கும் போது ஆயுட்காலம் ஆண்களுக்கு 71 வயது வரையும், பெண்களுக்கு 74 வயது வரையும் என கணிக்கப்பட்டுள்ளது. 1960ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 43.6 கோடியாக இருந்தபோது, சராசரி பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஆறு குழந்தைகள் இருந்தன.
கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அது குறைய வாய்ப்புள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 170 கோடியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan