சற்று முன் : கத்திக்குத்துக்கு பாடசாலை “மேற்பார்வையாளர்” பலி!! (முழுமையான விபரங்கள்)
10 ஆனி 2025 செவ்வாய் 12:24 | பார்வைகள் : 9963
இன்று காலை Nogent (Haute-Marne) நகரில் உள்ள நடுத்தர பாடசாலை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பாடசாலையின் மேற்பார்வையாளர் (surveillante) ஒருவரை கத்தி ஒன்றினால் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் தாக்கியிருந்தான்.
இந்நிலையில், சற்று முன்னர் குறித்த மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 31 வயதுடைய குறித்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நகரில் உள்ள Françoise Dolto எனும் நடுத்தர பாடசாலையின் வாசலுக்கு அருகே வைத்து தாக்குதல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
தாக்குதலாளி மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி எடுத்து குறித்த பெண் மேற்பார்வையாளரை தாக்கியுள்ளான். அவனது நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. ஜொந்தாமினர் அவனைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan