ஒத்திவைக்கப்பட்ட நாசா,இஸ்ரோ அக்சியம்-4 விண்வெளிப் பயணம்

10 ஆனி 2025 செவ்வாய் 12:40 | பார்வைகள் : 1897
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த அக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் அக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், மோசமான வானிலை காரணமாக நாளை (ஜூன் 11 ஆம் திகதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நான்காவது தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர்.
நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ கூட்டு முயற்சியான இந்த அக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1