வாடகை மகிழுந்து சாரதிகள் மீண்டும் களத்தில்!! - வீதி முடக்க போராட்டம்!!
10 ஆனி 2025 செவ்வாய் 09:24 | பார்வைகள் : 7858
வாடகை மகிழுந்து சாரதிகள் இன்று ஜூன் 10, செவ்வாய்க்கிழமை வீதி முடக்க போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பிரான்சின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
வீதிகளில் மெதுவாக மகிழுந்துகளைச் செலுத்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டமாகும். சென்ற மே மாதத்தில் பல நாட்கள் இதுபோல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அது இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. அதை அடுத்தே மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தலைநகர் Paris, Lyon, Nice, Montpellier, Nantes மற்றும் Bordeaux உள்ளிட்ட நகரங்களில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
புதிய சுகாதார காப்புறுதி சட்டத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. வாடகை மகிழுந்து சாரதிகள் நோயாளிகளிடம் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு 13 யூரோக்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்த சட்டமாகும். காப்புறுதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த திட்டத்தை காப்புறுதி நிறுவனங்கள் அரசுடன் இணைந்து ஒப்பந்தம் போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan