Paristamil Navigation Paristamil advert login

திடீரென அதிகரிக்கும் வெப்பம்! - 34°C.. !

திடீரென அதிகரிக்கும் வெப்பம்! -  34°C.. !

10 ஆனி 2025 செவ்வாய் 07:34 | பார்வைகள் : 1355


இவ்வாரம் தலைநகர் பரிஸ் உட்பட பல நகரங்களில் திடீரென வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இன்று செவ்வாய்க்கிழமை சராசரியாக 28°C முதல் 31°C வரையான வெப்பம் நிலவும் எனவும்,  அதிகபட்சமாக 34°C வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் 20°C எனும் சராசரி வெப்பம் நிலவும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவிக்கிறது.
 

நாளை மறுநாள் வியாழக்கிழமை அதிகபட்சமாக 34°C வெப்பம் நாட்டின் பல நகரங்களில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்