இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி
10 ஆனி 2025 செவ்வாய் 05:13 | பார்வைகள் : 3766
இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை மேற்காசிய நாடான சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் உள்ளன. கடந்த மாதமே துவங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வேலை விசாவை தவிர, இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
கடந்தாண்டில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மற்ற விசாக்கள் வாயிலாக வந்தவர்கள், ஹஜ் பயணத்தில் சட்டவிரோதமாக பங்கேற்றனர். அதையடுத்து, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan