Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மாநகரசபை - யார் மாற்றீடு!

பரிஸ் மாநகரசபை - யார் மாற்றீடு!

9 ஆனி 2025 திங்கள் 16:06 | பார்வைகள் : 635


2026 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் மாநகர சபைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய மேயர் அன் இதால்கோ 2024 நவம்பர் 26 அன்று, மீண்டும் போட்டியிடமாட்டார் என அறிவித்துள்ளார். இதையடுத்து பலர் மாநகரபிதா பதவிக்கு தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் போட்டியின் முக்கிய போட்டியாளர்களாக பலர் முனைந்துள்ளனர். இதோ அவர்களின் பட்டியலும், காரணமும், கட்சியும்.

இமானுவல் கிரெகுவா - EMMANUEL GRÉGOIRE (Paris en Grand)
முன்னாள் துணை மாநகரபிதா - தற்போது அன் இதால்கோவுடன் விரிசல் ஏற்பட்டு, 2026 தேர்தலுக்குப் போட்டியிடுகிறார். 450 சமூகநல ஆதரவாளர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். முதலில் இவர் ரெமி பெரோவை எதிர்த்து கட்சித் தேர்வில் வெல்ல வேண்டும்.

பியர்-ஈவ்ஸ் பூர்னாசெல் - PIERRE-YVES BOURNAZEL (Union Capitale)
18ஆம் வட்டார உறுப்பினர். Edouard Philippe இன்  Horizons கட்சியில், அரசு ஊழியர்களின் குறைந்த உழைப்பை விமர்சிக்கிறார்.

ரஷிதா தாத்தி - RACHIDA DATI (Changer Paris) 
பாரிஸ் 7ஆம் வட்டார நகரபிதா, கலாச்சார அமைச்சர். நேரடி மக்கள் தேர்தல் மூலம் மாநகரபிதாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இயன் ப்ரொஸா - IAN BROSSAT (Communiste)
பாரிஸ் செனட்டர். 'நான் தயாராக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். பசுமை மற்றும் இடதுசாரிகளுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரெமி பெரோ - RÉMI FÉRAUD (Paris en Commun)
அன் இதாhல்கோவின் விருப்பமான வாரிசு. 2026 தேர்தலுக்காக தயாராகிறார்.

யானிக் ஜதோ - YANNICK JADOT  (Écologistes)
பசுமைக்கட்சி செனட்டர். பசுமை, இடதுசாரி மற்றும் சிவில் சமுதாயத்தை ஒன்றிணைக்க விரும்புகிறார்.

தாவிட் பெலியார் - DAVID BELLIARD (Écologistes)
11ஆம் வட்டார உறுப்பினர். உள்நிலைத்தேர்தலில் வெற்றி பெற்றவர். பொதுமக்கள் வசதிக்காக பெரும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

பிரான்சிஸ் ஸ்பினர் - FRANCIS SZPINER (Demain Paris)
முன்னாள் நகரபிதா. 'ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு' என வாக்குறுதி தருகிறார். ரஷிதா தாத்தியை Macronisme ஆதரவாளரென குற்றம்சாட்டுகிறார்.

கேப்ரியல் அத்தால்  - GABRIEL ATTAL (வதந்தி):
முன்னாள் பிரதமர். தற்போது ஓரமாக உள்ளாலும், சமீபத்திய கருத்துக்கணிப்பில் 42 சதவீத பரிஸ்வாசிகள் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். Renaissance கட்சி அவரை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

போட்டிகள் இன்னும் மும்மராக சூடு பிடிக்க உள்ளது. இன்னமும் எத்தனை போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனரோ?

வர்த்தக‌ விளம்பரங்கள்