Paristamil Navigation Paristamil advert login

Fleury-Mérogis : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

Fleury-Mérogis : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

9 ஆனி 2025 திங்கள் 15:40 | பார்வைகள் : 2114


18 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.

​​Fleury-Mérogis (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. aங்குள்ள Croix Blanche  வணிக வளாகம் அருகே அதிகாலை 5.30 மணி அளவில் அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலர் மீது ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இளைஞன் முதலுதவி சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜொந்தாமினர் உலங்குவானூர்தியை பயன்படுத்தி தப்பி ஓடிய கொலைகாரனை தேடி வருகின்றனர்.

சென்ற வருடம் மே 25 ஆம் திகதி இதே பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றது. அதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்