தடுத்து வைக்கப்பட்டவர்களை பிரான்சுக்குத் திரும்ப அனுமதியுங்கள் - எமானுவல் மக்ரோன்!
9 ஆனி 2025 திங்கள் 15:06 | பார்வைகள் : 10117
லஸ்தீன ஆதரவு போராளிகள் மற்றும் மனிதநேய உதவிகளை கொண்டு செல்லும் ஒரு கப்பலில் பயணித்த ஆறு பிரெஞ்சு குடிமக்கள் தொடர்பாக, பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், மிக விரைவாக அவர்கள் பிரான்சுக்குத் திரும்ப அனுமதிக்கப்படல் வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தக் கப்பல், 'மட்லீன் (Madleen)', காசா பகுதியில் சேர முயற்சித்தபோது இஸ்ரேல் படையினர், அதை இரவில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பல பிரெஞ்சு இடதுசாரி அரசியல் தலைவர்கள், ஐரோப்பிய தலைவர்கள், குறிப்பாக மக்ரோன், அமைதியாக இருக்கின்றனர் என கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.
அந்த கப்பலில் பிரெஞ்சு ஐரோப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் மற்றும் சூழலியல் போராளி கிரெட்டா துன்பெர்க் ஆகியோரும் இருந்தனர்.
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, மக்ரோன் இஸ்ரேலிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்!


























Bons Plans
Annuaire
Scan