ட்ரம்பிடம் இருந்து கிரீன்லாந்து- அண்டார்டிகாவை பாதுகாக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!
9 ஆனி 2025 திங்கள் 10:39 | பார்வைகள் : 2721
”கிரீன்லாந்தும் அண்டார்டிகாவும் விற்பனைக்கு இல்லை!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இந்த தகவலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இன்று ஜூன் 9, திங்கட்கிழமை காலை முதல் நீஸ் நகரில் (Nice) இடம்பெற்று வரும் பெருங்கடல் உச்சிமாநாட்டில் ( sommet sur les Océans ) கலந்துகொண்ட மக்ரோன், அங்கு வைத்தே இதனை தெரிவித்தார். கிரீன்லாந்து மீதும், அண்டார்டிகா மீதும் குறிப்பாக வடதுருவம் மீதும் அமெரிக்க தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. அதை அடுத்து, அவற்றை பாதுகாக்கும் நோக்கோடு “ஆழ்கடல் விற்பனைக்கு இல்லை. கிரீன்லாந்து, அண்டார்டிகா அல்லது ஆழ்கடல்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை” என மக்ரோன் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் தலையீடுகள் ஆர்டிக்ட் பகுதியில் அதிகமாக இருப்பதாகவும், கிரீன்லாந்தின் பெரும் பகுதியை அமெரிக்க ஆக்கிரமிக்க திட்டமிட்டிருப்பதாகவும், புதிய கடல்வழி வணிகத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முண்டியடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan