Montreuil : சிறுமியை கடத்தல் முயற்சி.. தந்தை துணிகரச் செயல்!!
9 ஆனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3792
ஐந்து வயதுச் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை மேற்கொண்ட துணிகரச் செயலால் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Montreuil (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. தந்தை, மகள், தாயார் ஆகிய மூவரும் மாலை 6.30 மணி அளவில் 129 இலக்க பேருந்தில் ஏற முற்பட்டபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் குறித்த சிறுமியை கடத்த முற்பட்டுள்ளார்.
அதற்கிடையில் தந்தை சுதாகரித்துக்கொண்டு மகளை இழுத்து காப்பாற்றினார். கடத்தல்காரர் அங்கிருந்து தப்பி ஓட, தந்தை அவரை துரத்திச் சென்றார்.
சில மீற்றர் தூரம் ஓடிச் சென்றதன் பின்னர், ஒரு வீதி முனையில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தார்.
அதற்கிடையில் RATP பேருந்து சாரதி காவல்துறையினரை அழைத்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடையுமம் வரை கடத்தல்காரரை தந்தை மடக்கி வைத்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.
பேருந்தில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் எடுத்துக்கொண்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan