Grigny :சகோதரிகளை கத்தியால் குத்தி கொல்லமுற்பட்ட சிறுவன்!!
9 ஆனி 2025 திங்கள் 01:37 | பார்வைகள் : 4520
சகோதரிகளை கத்தியால் குத்தி கொல்ல முற்பட்ட 10 வயதுடைய சிறுவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூன் 7, சனிக்கிழமை பகல் இச்சம்பவம் Grigny (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. பகல் 1.15 மணி அளவில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காவல்துறையினருக்கு அழைத்துள்ளார். அவரும் அவருடைய சகோதரியும் குளியலறைக்குள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களைக் கொல்வதற்கு அவரது 10 வயது தம்பி கத்தியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது குறித்த சிறுவன் சமையல் கத்தி ஒன்றை கைகளில் வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருந்ந்துள்ளார். பின்னர் உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு சிறுவனை மடக்கி பிடித்தனர்.
சிறுவனையும் அவனது இரு சகோதரிகளையும் விசாரணைகளுக்காக Juvisy-sur-Orge காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan