சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இதுவரை மக்ரோன் எந்த முயற்சியும் எடுத்ததில்லை! - மரீன் லு பென் ஆவேசம்!!
8 ஆனி 2025 ஞாயிறு 21:13 | பார்வைகள் : 5250
பிரான்சில் இடம்பெறும் அகதிகளின் சட்டவிரோத குடிவரவை தடுக்க இம்மானுவல் மக்ரோன் இதுவரை எந்த முயற்சிகளும் மேற்கொண்டதில்லை என மரீன் லு பென் சாடியுள்ளார்.
இன்று ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில் "இம்மானுவேல் மக்ரோன் "சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்துப் போராட ஒருபோதும் எதையும் செய்யவில்லை." என தெரிவித்தார்.
அத்தோடு உள்துறை அமைச்சர் Bruno Retailleau மீதும் அதே குற்றச்சாட்டை வைத்தார். "அவர் தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்கிறார். சாக்குப்போக்குகளை சொல்லுகிறார்." என விமர்சித்தார்.
Rassemblement national கட்சியைச் சேர்ந்த மரீன் லு பென், அகதிகள் விடயத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan