15,000 வருடங்களுக்கு முற்பட்ட நாயின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!
8 ஆனி 2025 ஞாயிறு 20:13 | பார்வைகள் : 2863
பிரான்சில் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாயின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரான்சின் தென் கிழக்கு மாவடமான Ardèche இல் உள்ள மலையடிவார கிராமம் ஒன்றில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாயின் முழுமையான எலும்புக்கூடு கிடைத்ததாகவும், அகழ்வாராய்ச்சியாளர்கள் குறித்த எலும்புக்கூடு மனிதர்களுடன் வாழ்ந்த பெண் நாய் ஒன்றினது எனவும் அது 26 கிலோ எடையுள்ள 62 செ.மீ உயரமுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நாய் காயமடைந்து உயிரிழந்ததற்குரிய அடையாளம் உள்ளதாகவும், குறித்த காயம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஐரோப்பாவுக்குச் சொந்தமான நாயின் இனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan