மொனாக்கோ இளவரசருக்கு மக்ரோனின் ஆச்சரியமான பரிசுப்பொருட்கள்!!!
8 ஆனி 2025 ஞாயிறு 17:29 | பார்வைகள் : 3934
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பெருங்கடல் மாநாட்டை முன்னிட்டு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் II-க்கு ஊகிக்க முடியாத வித்தியாசமான பரிசுகளை வழங்கியுள்ளார்.
முக்கியமான பரிசாக, இந்தியப் பெருங்கடலில் கண்டறியப்பட்ட ஒரு கடலுக்கடியில் உள்ள பெரிய மலைக்கு "அல்பர்ட் II மலை" என பெயரிட்டு அங்கீகரித்துள்ளார். இந்த மலை 1,958 மீட்டர் உயரம் கொண்டுள்ளது, இது இளவரசரின் பிறந்த ஆண்டை குறிக்கிறது. மேலும் இந்த பெயரிடலானது சர்வதேச hydrographique அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்பர்ட் II-க்கு பிடித்த ஸ்பெயின் டென்னிஸ் வீரர் Rafael Nadal நினைவாக தயாரிக்கப்பட்ட 92 பிரதிகளில் ஒன்றான “Rafa எண் 5” டென்னிஸ் ராக்கெட்டும் பரிசளிக்கப்பட்டது. இது 2005ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது, அது இளவரசர் பதவியேற்ற ஆண்டும், நாடால் மொன்டே-கார்லோவில் (Monte-Carlo) முதலாவது வெற்றியை பெற்ற ஆண்டுமாகும்.
அதோடு, ஜூல்ஸ் வெர்னின் (Jules Verne) 1880ஆம் ஆண்டுக் கண்காட்சியுடன் கூடிய "19வது நூற்றாண்டு பயணிகள்" (Voyageurs du XIXe siècle) என்ற புதுமையான நூலும் வழங்கப்பட்டுள்ளது. இது இளவரசரின் பெரியதந்தை அல்பர்ட் I-ன் தேடல் மற்றும் அறிவியல் ஆர்வங்களை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan