வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தின் கதை இதுவா ?
8 ஆனி 2025 ஞாயிறு 17:42 | பார்வைகள் : 4139
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், தற்போது வெங்கட் பிரபு லொகேஷன் பார்க்கும் பணியில் இலங்கையில் தான் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்த படமும் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட சயின்டிஃபிக் கதை என்றும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு நடிகைகள் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருவர் ’மாநாடு’, ’ஹீரோ’ படங்களில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன்; இன்னொருவர் டிராகன்’ படத்தில் நடித்த காயடு லோஹர் என கூறப்படுகிறது.
’டிராகன்’ படத்துக்கு பிறகு ’இதயம், முரளி’, ’எஸ்டிஆர் 49’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமான காயடு லோஹர், தற்போது சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan