உத்தரபிரதேச எம்.பியுடன் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமண நிச்சயதார்த்தம்
8 ஆனி 2025 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 4934
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் உத்தரபிரதேச எம்.பி பிரியா சரோஜ் ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங் (Rinku Singh).
இந்திய அணிக்காக 33 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 601 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.பி பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் லக்னோவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் கிரிக்கெட் மற்றும் அரசியல் துறையில் உள்ள சில பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ரிங்குவும், பிரியவும் தங்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை மாற்றிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan