DAX - பெனுவாவின் கொலை - 17 வயது கொலை - 16 வயது இளைஞன் சரணடைவு!
8 ஆனி 2025 ஞாயிறு 16:27 | பார்வைகள் : 8854
Dax (Landes) பகுதியில் கடந்த வார இறுதியில், PSG யின் வெற்றியை அடுத்து நடந்த கொலை சம்பவத்தில், 17 வயதான பெனுவாவை (Benoît) கொன்றதாக சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞன், நேற்று சனிக்கிழமை 7ம் திகதி அன்று, போர்தோ (Bordeaux - Gironde) காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
பெனுவாவை 2025 மே 31 இரவு முதல் ஜூன் 1 காலை வரை PSG -யின் சாம்பியன்ஸ் லீக் வெற்றியைப் பின்னணியாகக் கொண்டு கத்திக்குத்தயால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞன், காவற்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தான்

இவன் மீதான சர்வதேச தேடுதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இன்டர்போலின்' சிவப்பு அறிக்கையில்; 'அதி ஆபத்தானவர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை அவனை உலகளவில் கைது செய்ய உதவுவதற்காக வெளியிடப்பட்டது.
இந்த இளைஞர், இன்று 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, Mont-de-Marsan (Landes) நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிக்குமுன் நிறுத்தப்படவுள்ளான்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 15 வருட சிறைத்தண்டனைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்டுகின்றது. இவன் 16 வயதுடையவன் என்பதால் பெரியவர்களிற்கு வழங்கப்படும் தண்டனையின் பாதியளவான 15 வருடத் தண்டனையே வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
PSG வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த மாலையில், பெனுவா பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
DAX நகர அதிபர், சில நாட்களுக்கு முன்னர் இந்தக் குற்றவாளி, பெனுவாவின் தொப்பியை திருடியதாகவும், இருவருக்கும் முன்பிருந்தே பிரச்சனை இருந்ததனால், இது பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வழக்கு தற்போது 'முன்பே திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை' எனும் பிரிவிலேயே இந்த விசாரணையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan