சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் கொக்கெய்ன் குழு!!
8 ஆனி 2025 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 3216
சார்ள்-து-கோல் (Roissy Charles de Gaulle) விமான நிலையத்திலுள்ள பயணப்பொதிகளை நிர்வகிக்கும் பணியாளர்கள் (BAGAGISTE) தொடர்புடைய கொக்கைன் கடத்தல் செயற்குழு ஒன்றை ஜோந்தார்மினர் மடக்கி உள்ளனர்.
2025 ஜூன் 3-ம் திகதி, ஏழு பேர் மீது கொக்கைன் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், Île-de-France பகுதியில் அமைந்துள்ள சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் பணியாற்றும் பயணப்பொதி மற்றும் சரக்குப் பணியாளர்கள் இதில் பங்காற்றியுள்ளனர். அவர்கள், கடந்த சில மாதங்களாக பிரேசிலிலிருந்து வந்த போதைப்பொருள் பொதிகளை பிரான்சிற்குள் கடத்துவதை எளிதாக்கி உதவி உள்ளனர்.
ஜூன் 3 அன்று Île-de-France -இன் நான்கு மற்றும் Hauts-de-France-இன் இரண்டு மாவட்டங்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணை கடந்த ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஜோந்தாரம் வீரர்கள் மற்றும் பல சிறப்பு பிரிவுகள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வலையமைப்பு செய்ன்-சன்-துனி பகுதியில் மிகவும் செயற்பாடாக இருந்தது. அந்த அமைப்பு மாதத்திற்கு 20 முதல் 50 கிலோகிராம் வரை கொக்கைனைக் கடத்தக் கூடிய திறனுடைய, விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களைப் பயன்படுத்தி செயல்பட்டுள்ளது.
ஜூன் 3-ம் திகதியன்று நடைபெற்ற சோதனையில், சுமார் 500,000 சொத்துக்கள் மற்றும் 100,000 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டன. ஐந்து வாகனங்கள், ஒரு வீடு, பல பிரமாண்ட விலையுள்ள ஆடைகள் மற்றும் பல பொருட்கள், ஒரு கையடக்க துப்பாக்கி ஆகியவையும் அரச அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan