செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு இன்றுடன் நிறைவு
8 ஆனி 2025 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 8238
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள மனித புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள், இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,
செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒன்பதாவது நாளாக நடைபெற்றது. கடந்த ஒன்பது நாட்களாக பரீட்சார்த்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது.
இதுவரையிலும் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. அவை, பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும்.
குறித்த பகுதி குற்றம் நிகழ்ந்த பிரதேசமான மனிதப் புதைகுழியாக நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய தொடர்ந்து 45 நாட்களுக்கு மேற்கொள்ள அதற்கான செலவுக்கான நிதியை, கால தாமதமின்றி ஒப்படைக்க கூறிய வரவு-செலவுத்திட்டம் கையளிக்கப்பட்டது.
நிதிகளை வழங்கும் அரச நிறுவனங்களிடம் வரவு-செலவுத்திட்டம் கையளிக்கப்பட்டு இரண்டு வார கால அவகாசத்தில், உத்தேச திகதியாக ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் அகழ்வாய்வு பணியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan