ஆர்யாவின் 36-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?
8 ஆனி 2025 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 5711
கடந்த 2005 ஆம் ஆண்டு, ’அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆர்யா, அதன் பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து உள்ளார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், ஆர்யாவின் 36-வது திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’ரன் பேபி ரன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.
மோகன்லால் நடித்த ’எம்புரான்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி, இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதாகவும், ’காந்தாரா’ படத்திற்கு இசையமைத்த அக்னீஷ் லோக்நாத் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர், ஜூன் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் ஆர்யா தற்போது ’மிஸ்டர் எக்ஸ்’ மற்றும் ’வேட்டுவம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்களை முடித்துவிட்டு ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan