Hauts-de-Seine : பேருந்து மோதி பெண் பலி!
8 ஆனி 2025 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 6163
பேருந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜூன் 6, வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Hauts-de-Seine மாவட்டத்தின் Courbevoie நகரில் இடம்பெற்றுள்ளது. RATP க்குச் சொந்தமான 277 ஆம் இலக்க பேருந்து ஒன்றுடன் இரவு 9.30 மணிக்கு இளம் பெண் ஒருவர் மோதுண்டுள்ளார். Place Hérold பகுதியில் வீதியை கடக்க முற்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், படுகாயமடைய அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாரதி குறித்த பெண்ணைக் கவனிக்கவில்லை எனவும், அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan