உக்ரைனில் ட்ரோன்கள் தயாரிக்க பிரான்ஸ் களத்தில் இறங்குகிறது!

7 ஆனி 2025 சனி 15:17 | பார்வைகள் : 2339
உக்ரைனில் பிரான்சிய பாதுகாப்பு நிறுவனங்கள் ட்ரோன்கள் தயாரிக்கவிருக்கின்றன என்பது மிக முக்கியமான மற்றும் நல்ல செய்தி என ‘centre d’information sur la crise ukrainienne’ தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் விநியோகச் சங்கிலி குறைக்கப்படுவதால் போக்குவரத்துக்கான நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இன்றைக்கு, ரஷ்யாவின் இழப்புகளில் 80% உக்ரைனிய ட்ரோன் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ளன; இது ஒரு பாரம்பரிய ஆயுதப் போராக இல்லாமல் தற்போது ட்ரோன்கள், போரில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உக்ரைனில் தயாரிக்கப்படுவதால், பிரஞ்சு நிறுவனங்கள் ட்ரோன் பயன்பாட்டில் உள்ள தன்னுடைய அனுபவத்தை உக்ரைனியர்களிடமிருந்து நேரடியாக பெற முடியும்.
ட்ரோன் தொழில்நுட்பம் விரைவில் மேம்பட்டு வரும் சூழலில், உக்ரைனிய போர்பரப்பில் நிகழும் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன பரிமாற்றங்களை நேரில் அறிந்தால் தான் போட்டியில் முன்னிலை பிடிக்க முடியும் என்பதையும் அந்த அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார்.