செம்மணியில் மீட்கப்பட்ட கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகள்

7 ஆனி 2025 சனி 14:49 | பார்வைகள் : 1553
யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் , இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1