Paristamil Navigation Paristamil advert login

நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்!!

நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்!!

7 ஆனி 2025 சனி 13:23 | பார்வைகள் : 6937


19 வயதுடைய கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

ஜூன் 6, நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Versailles (Yvelines) நீதிமன்றத்துக்கு விசாரணைகளுக்காக அழைத்துவரப்பட்டிருந்த குறித்த கைதி, கழிவறைக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்து, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடியுள்ளார்.

தப்பி ஓடிய கைதியை தேடும் பணி இடம்பெற்று வருகிறது. குறித்த கைதி கொலை குற்றம் ஒன்றின் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 

கைதியின் வீடு, அவரது நண்பர்கள் வீடு, தொடருந்து நிலையங்கள் என பல இடங்களில் நேற்று மாலை தேடுதல் பணி இடம்பெற்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்