நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்
7 ஆனி 2025 சனி 10:51 | பார்வைகள் : 5002
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது.
புதுடில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இன்றைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5364 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 4724 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கேரளாவில் அதிக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. ஒருநாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதற்கு அடுத்து, குஜராத்(107), மேற்கு வங்கம்(58), டில்லி(30) பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan